Courtesy: oneindia
புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
பலன்கள்
சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு யோகமான ஆண்டாக இருக்கப்போகிறது.
சுப கிரகமான குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் சுபகாரியங்களில் தடை ஏற்படும் புதிய முயற்சிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் மருத்துவ செலவுகள் வரவும் வாய்ப்புள்ளது.
குரு பகவானின் பார்வை விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவது அதிர்ஷ்டத்தை தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும் புதிய கடன்கள் வாங்கலாம்.
வீடு சொத்து வாங்குவதற்கு கடன் பெறலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உள்ளது. அடுத்தவர்களை நம்பி தொழில் வியாபாரத்தில் ஒப்படைப்பதை தவிர்க்கவும்.
சனி பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பொருளாதாரத்தில் ஓரளவு லாபம் கிடைத்தாலும் சுப செலவுகள் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும்.
வாகன பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு அடிக்கடி செய்து வர பாதிப்புகள் குறையும் தொழிலில் நல்ல வருமானமும் லாபமும் கிடைக்கும்.
சனிபகவான் ஏப்ரல் மாதத்தில் கும்ப ராசிக்கு அதிசாரமாக செல்வது கண்டச்சனி காலமாகும். குடும்பத்தில் இருப்பவர்கள் மீன் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். சகோதரர்களுடன் சொத்துப் பிரச்சினைகள் ஏற்படும்.
விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதிய மன குழப்பங்கள் வரும் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மின்சாரம் நெருப்பு போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. பணத்தட்டுப்பாடு நீங்கும்.
பரிகாரம்
- புதன்கிழமைகளில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் லட்சுமி நரசிம்மரை வழிபடலாம் அதேபோல சரபேஸ்வரரை வழிபட பாதிப்புகள் நீங்கும்.
- துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம் பசுவுக்கும் பைரவருக்கும் தினமும் உணவுப் பொருட்களில் கொடுக்க பாதிப்புகள் நீங்கும்.