ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது.
இதுகுறித்து ஜப்பான் புவியியல் மையம் தரப்பில், “ ஜப்பானில் இன்று (சனிக்கிழமை) காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஒய்டா, மியாசாகி ஆகிய பகுதிகளில் நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக 13 பேர் காயமடைந்ததாகவும், சில கட்டிடங்கள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15,000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.
4 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்திருப்பதால், ஆண்டொன்றுக்கு உலகில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஜப்பானில் மட்டும் 20% நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.