டிக்டாக் மூலம் பேஸ்புக் பங்குகள் 40% சரிவு.. 2022 ராசி இல்லையாம்…!

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா முதல் முறையாக மார்ச் காலாண்டில் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அறிவித்தது.

இதற்கு காரணமாக டிக்டாக், யூடியூப் நிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள தனிநபர் பாதுகாப்பு கொள்கையில் செய்யப்பட்ட உள்ள மாற்றங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் பாதிக்கும் என முன்கூட்டியே கணிப்பில் தெரிவித்தது.

சாதாரண அறிவிப்பு இல்லை

இது வெறும் சாதாரண அறிவிப்பு இல்லை, இனி மெட்டா நிறுவனத்தின் கீழ் இருக்கும் பேஸ்புக் மற்றும் இதர செயலிகளால் டிக்டாக் மற்றும் யூடியூப் ஆதிக்கத்தைத் தகர்ப்பது மிகவும் கடினம் என்பதைக் காட்டுகிறது.

 பேஸ்புக் ஆதிக்கம்

பேஸ்புக் ஆதிக்கம்

இதனால் பேஸ்புக் மீண்டும் தனது ஆதிக்க நிலையை அடைய முடியாது என்பது தான் இந்த அறிவிப்பின் முழு அர்த்தம். இதன் வாயிலாக முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வரும் நிலையில் செப்டம்பர் 2021 உச்ச நிலையில் இருந்து மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.3 டிரில்லியன் டாலர் உச்ச நிலையில் இருந்து 500 பில்லியன் டாலரை இழந்துள்ளது.

 565 பில்லியன் டாலர்
 

565 பில்லியன் டாலர்

இதன் மூலம் மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்புத் தற்போது வெறும் 565 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் உலகில் அதிகச் சந்தை மதிப்புக் கொண்ட நிறுவனங்கள் பட்டியில் டாப் 10 இடத்தில் வெளியேற்றப்பட்டுச் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்திற்குப் பின்னால் 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

 மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

இதேவேளையில் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க்-கின் சொத்து மதிப்பு 46 பில்லியன் டாலர் சரிந்து தற்போது 78.8 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. 2022ஆம் ஆண்டுத் துவங்கியதில் மெட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 40 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

 மெட்டா பங்கு விலை

மெட்டா பங்கு விலை

இது மெட்டா நிறுவனம், மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் பங்குகள் விலை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு அறிவிப்புக்கு பின்பு 323.00 டாலரில் இருந்து 205 டாலர் வரையில் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Meta kicked out of TOP 10 most valuable cos in world, Mark Zuckerberg lost $40bn Wealth

Meta kicked out of TOP 10 most valuable cos in world, Mark Zuckerberg lost $40bn Wealth டிக்டாக் மூலம் பேஸ்புக் பங்குகள் 40% சரிவு.. 2022 ராசி இல்லையாம்…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.