தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 12 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
மாநகராட்சிகளில் உள்ள 1374 வார்டுகளுக்கும், நகராட்சியில் உள்ள 3843 வார்டுகளுக்கும், பேரூராட்சியில் உள்ள 7621 வார்டுகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதியில் 8,454 வாக்கு சாவடிகள் தயார் நிலையில் உள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 31,678 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,100 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என தெரிவித்துள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.