சென்னை:
தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறை தவிர்க்கப்பட்டது. ஒரு சில இடங்களில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் விரைந்து சரிசெய்யப்பட்டது. சில நிகழ்வுகள் குறித்து தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…தமிழகத்தில் மேலும் 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு