நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்; முழு விவரம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு காலை 9 மணி நிலவரப்படி, சராசரியாக 8.21 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, மாநகராட்சிகளில் 5.78%, நகராட்சிகளில் 10.32%, பேரூராட்சிகளில்  11.74% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 3.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே சென்னை மாநகராட்சியில் தான் வாக்குப்பதிவு மிகவும் குறைவாக நடைபெற்று வருகிறது.
மதுரையில் அதிகபட்சமாக 24.62% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தமிழகத்தின் பிற இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதன்படி, எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு சதவிகித வாக்குகள் பததிவாகியுள்ளன என்பதைப் பார்ப்போம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 9 மணி நிலவரம்
விழுப்புரம் – 11.37 %
திருச்சிராப்பள்ளி – 13.00 %
மதுரை – 24. 62 %
சென்னை – 3.96 %
பெரம்பலூர் – 9.77
திண்டுக்கல் – 12.01
சேலம் – 12.97
கடலூர் – 10.11
திருவாரூர் – 10.25
கிருஷ்ணகிரி – 9.33%
திருவள்ளூர் – 6.25%
தஞ்சை – 6.1%
மயிலாடுதுறை – 9.02%
சிவகங்கை – 10.19 
நாகப்பட்டினம் – 8.05%
கன்னியாகுமரி – 7%
வேலூர் – 8.61%
ராமநாதபுரம் – 8.88%
திருப்பூர் – 8.09%
கடலூர் – 10.11%
அரியலூர் – 12.84%
காஞ்சிபுரம் – 11.02%
தென்காசி – 12.00%
புதுக்கோட்டை – 10.47%
தேனி – 12.00%
மயிலாடுதுறை – 9.02%
ராணிப் பேட்டை – 7.70%
திருவண்ணாமலை – 18.5%
விருதுநகர் – 8.9%
காஞ்சிபுரம் – 11.03%Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.