Tamil Serial Baakiyalakshmi Rating Update : என்னதான் மனைவி வேண்டாம்னு சொல்லிவிட்டு முன்னாள் காதலியை மணமுடிக்க கோபி நினைத்தாலும், இப்போது இந்த முயற்சி தேவையான இல்லையா என்று யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாக்யலட்சுமி. இல்லத்தரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல், டிஆர்பி ரேட்ங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. வழக்கமான குடும்ப கதைதான் என்றாலும் கூட திருமணத்திற்கு மீறிய உறவு தொடர்பான இந்த கதைகளம் சற்று விறுவிறுப்பு குறையாமல் உள்ளது என்று சொல்லாம்
பாக்யாவின் கணவர் கோபி, தனது தோழியுடன் வீட்டிற்கு தெரியாமல் பழகி வருகிறார். ஒரு கட்டத்தில், அவளை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். இந்த நேரத்தில் கோபியின் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியவர அவர், கோபியை கண்டிக்கிறார். ஆனால் இதை காதில் வாங்கிக்கொள்ளாத கோபி, தோழியுடன் சுற்றி வருகிறார். இது குறித்து வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்ல போன கோபி அப்பா பக்கவாதததால் பாதிக்கப்படுகிறார்.
இதனால் அவரால் பேச முடியாத நிலைக்கு சென்றுவிடுவதால், கோபிக்கு ஹேப்பியாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாக்யாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார். இது தொடர்பான ப்ரமோ தற்போது வெளியாகயுள்ளது. பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாலும், கோபியின் முகத்தில் ஒரு சந்தோஷம் தெரியவில்லை. மாறாக இந்த முடிவு சரிதான என்ற குழப்பத்தில் இருப்பது போல் உள்ளது. ஆனால் தோழி சொல்லும் அனைத்திற்கும் தலையாட்டுகிறார்.
இதனால்அடுத்து என்ன நடக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கோபியின் அப்பா தற்போது நலம் பெற்று வருகிறார். இதனால் கோபியின் திருமணத்திற்கு முன்பு அவர் குணமடைந்து விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபுறம் வீட்டிற்கு செலவு செய்வதற்காக செழியன் கணக்கு பார்ப்பது சற்று சலிப்பை ஏற்படத்தி வருகிறது. ஆனால் சம்பளம் கம்மிதான் என்றாலும் தனது சம்பளத்தை அம்மாவிடம் கொடுக்கும் எழில் பாராட்டை பெறுகிறார்.
ஆனால் சீரியல்கள் அனைத்திலும் வில்லன்களுக்கு மட்டும் சற்று விதி விலக்காக உள்ளது ஏன் என்பது புரியாத புதிராகத்தான் உள்ளது. மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கப்படுவதாக கூறினாலும் வில்லன் அல்லது வில்லிக்கு வீட்டில் உள்ள அனைவருமே சப்போர்ட்தான் செய்கிறார்கள். குறிப்பாக வில்லன் ஒரு தப்பு செய்து மாட்டிக்கொள்ளும்போது அவருக்கு அனைவருமே மன்னிப்பு கொடுத்து சகஜமாவிடுகின்றனர்.
அதுபோலத்தால் வீட்டிற்கு செலவு செய்ய கணக்கு பார்க்கும் செழியனையும் வீட்டிற்காக சம்பளம் அனைத்தையும் கொடுக்கும் எழிலையும் ஒரே மாதிரி நடத்துகிறார்கள். அனைத்து சீரியலும் இப்படி வில்லிக்குதான் பேவராக போய்க்கொண்டிருக்கிறது அதற்கு பாக்யலட்சுமி சீரியல் விதி விலக்கல்ல. ஆனால் இப்போது கோபி நினைத்தது நடக்குமா அல்லது பாக்யாவின் உண்மை ஜெயிக்குமா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“