பிரித்தானியாவில் யூனிஸ் புயலால் மரம் விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த இளைஞர் குறித்த தகவல்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரித்தானியாவின் Hampshire மாநிலத்தைச் சேர்ந்த Alton நகரத்தில், Old Odiham சாலையில் வெள்ளிக்கிழமையன்று, யூனிஸ் புயலால் மரம் விழுந்து உயிரிழந்த இளைஞரின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளது.
23 வயதே ஆகும் அவரது பெயர் Jack Bristow. மணிக்கு 122 மைல் வேகத்தில் பிரித்தானியவை தூக்கிச் சென்ற யூனிஸ் புயலில் உயிரிழந்த 4 பேரில் இவரும் ஒருவர்.
சோகமான விடயம் என்னவென்றால், அவருக்கு இளம் வயது காதலியும், 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஜாக் பிரிஸ்டோ தனது Mercedes-Benz Sprinter காரில் ஓட்டுனருடன் சென்றுகொண்டிருந்த போது, யூனிஸ் புயலின் வேகத்தை தாக்குபிடிக்கமுடியாத 40 அடி உயர மரமொன்று வேருடன் சாய்ந்து பிரிஸ்டோவின் கார் மீது விழுந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு அவசர சேவைகள் உடனடியாக வந்து, பிரிஸ்டோவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் சிகிச்சையா பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது கார் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
யூனிஸ் புயலால் மேலும், வடக்கு லண்டனில் Haringey நகரில் கார் மீது மரம் விழுந்ததில் 30 வயது பெண், Merseyside-ல் டிரக் மீது குப்பைகள் விழுந்து 50 வயது ஆண் மற்றும் அயர்லாந்தில் ஒருவரும் உயிரிழந்தனர்.