தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் 179-வார்டுக்கு உட்பட்ட சிங்காரவேலன் நகரில் பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்து திமுக கட்சியினர் அவர்களை பிடிக்க சென்றபோது, அதிமுகவினர் பணத்தையும், பூத் சிலிப்பையைும் அங்கையே போட்டுவிட்டு தப்பியோடியாக சொல்லப்படுகிறது.
சென்னை: பூத் சிலிப்புடன் அதிமுகவினர் பணம் விநியோகிக்க முயற்சி என திமுகவினர் குற்றச்சாட்டு
#TNLocalBodyElections | #LocalBodyElection | #TNLocalBodyElectionwithPT | #UrbanLocalBodyElection | #AIADMK | #DMK | #Chennai pic.twitter.com/RcVjPRuqrQ
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 19, 2022
இதுதொடர்பாக காவல் துறையினரிடம் புகாரளித்த திமுகவினர், பூத் சிலிப்புகள் மற்றும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
பூத் சிலிப்புடன் பணத்தை விநியோகம் செய்த அதிமுகவினர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.