நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் வகையில் 37,000 மெற்றிடக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தவிர நாளைய தினம் 37, 500 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாகவும் இந்தக் கப்பலுக்கான கொடுப்பனவைச் செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாக வலுசக்தி அமைச்சு கூறியுள்ளது.
நாட்டில் எரிபொருள் விநியோகம் இன்றையதினம் தடையின்றி இடம்பெறுவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.