கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 95 ரன்னில் சுருண்டது.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 482 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஹென்ரி நிக்கோல்ஸ் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீபப்ர் டாம் பிளண்டல் 96 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டார். கிராண்ட்ஹோம் 45 ரன்கள் எடுத்து அரைசதம் நழுவவிட்டார். மேட் ஹென்ரி அதிரடியாக ஆடி 58 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியில் ஆலிவர் 3 விக்கெட்டும் ரபடா, மார்கிராம், ஜான்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 387 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி விக்கெட்டை மளமளவென இழந்தது.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 111 ரன்னில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக பவுமா 41 ரன்னும், கைல் வெரின் 30 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.