ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள அக்ரூ கிராமத்தில் பெண் ஒருவர் நெல் வயல் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மறைந்திருந்த கொள்ளையன் பெண்ணை பின்னாலிருந்து பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த பெண் தலையில் காய ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளையன் பெண் அணிந்திருந்த மோதிரம், கம்மல் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கழட்ட முயன்றுள்ளான்.
ஆனால், கை விரலில் இருந்த மோதிரத்தை கழட்ட முடியாமல் போனதால், ஆத்திரத்தில் விரலை வெட்டி மோதிரத்தை எடுத்துள்ளான். இதேபோல் கம்மலையும் காதில் இருந்து அறுத்துக் கொண்டு தப்பியுள்ளான். இதில் பெண் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்ப இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். பின், வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்.. கையெழுத்து போடாததால் ஆத்திரம்: தந்தையை கொலை செய்த மகன்கள் கைது