புதுடில்லி : லஷ்கர் – இ – தொய்பா அமைப்பிற்கு, ரகசிய ஆவணங்களை கசியவிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி அரவிந்த் திக்விஜய் நேகியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.நம் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற, தடை செய்யப்பட்ட லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு, சிலர் உதவி வருவதாக கடந்த ஆண்டு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த நவம்பர் 6ல் வழக்குப் பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரியான அரவிந்த் திக்விஜய் நேகியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர், ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில், போலீஸ் எஸ்.பி.,யாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பினருக்கு, சில ரகசிய ஆவணங்களை கசியவிட்டது தெரியவந்துள்ளது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement