கடந்த ஆண்டில் ஏராளமான நிறுவனங்கள் பங்கு சந்தைக்குள் நுழைந்தன. குறிப்பாக பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கு சந்தைக்குள் நுழைந்தன. எனினும் சில நிறுவனங்கள் மறக்க முடியாத வெளியீடுகளாக இருந்தன.
எனினும் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்ட சில நிறுவனங்களில் கடுமையான சரிவினைக் கண்டு வருகின்றன.
குறிப்பாக பேடிஎம், நய்கா, பிபி ஃபின்டெக், சோமேட்டோ நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நஆளீல் 3.58 லட்சம் கோடியை ஈட்டின.
எல்ஐசி ஐபிஓ எப்போது..? பங்கு விலை என்ன..? மோடி அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா..?
பெரும் இழப்பு
ஆரம்பம் என்னவோ அம்சமாக இருந்தாலும் இன்று வரையில் பார்க்கும்போது இந்த நிறுவனங்களில், 1.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளனர். இது சந்தையில் புராபிட் புக்கிங் காரணமாக விற்பனை இருந்து வந்த நிலையில், மேற்கொண்ட பங்குகளின் விலையானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது.
பேடிஎம்
குறிப்பாக இதில் பேடிஎம்- மட்டும் 45,597 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது. இது கடந்த நவம்பர் 18 நிலவரப்படி 1,01,399.72 கோடி ரூபாயாக இருந்தது. அதன் பங்கு மதிப்பில் மூன்றில் இருமடங்கு இழப்பினை கண்டுள்ளது.
நய்கா
நய்காவின் சந்தை மதிப்பானது நவம்பர் 10 நிலவரப்படி, 1,04,360.85 கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பானது, தற்போது 71,308.55 கோடி ரூபாயாக இருந்தது. இது 33,052.30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சோமேட்டோ
சோமேட்டோ முதலீட்டாளர்களுக்கு ஜூலை 23, 2021 நிலவரப்படி, 98,731.59 கோடி ரூபாயாக மதிப்பானதுஇ, 66,872.07 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. சோமேட்டோவில் மட்டும் 31,852.52 கோடி ரூபாயாக இழப்பினை கண்டுள்ளனர்.
பாலிசி பஜார்
பாலிசி பஜார் நிறுவனத்தில் 19,200.38 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது. இந்த ஸ்கிரிப்டில் நவம்பர் 15,2021 நிலவரப்படி, 54,070.33 கோடி ரூபாயாக இருந்த மதிப்பானது, 34,869.95 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
போட்டதாவது கிடைக்குமா?
ஆரம்பத்தில் பங்கு வெளியீட்டில் பல மடங்கு விண்ணப்பத்தினை ப-பெற்றிருந்த இந்த நிறுவனங்கள், தற்போது நிலவரப்படி பெரும் சரிவினைக் கண்டுள்ளன. ஆக முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பினை கொடுத்துள்ளது. இதற்கிடையில் இது வரவிருக்கும் நாட்களிலும் தொடருமா? இனியும் இந்த பங்குகள் எப்படியிருக்கும். அதிலும் தற்போது சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், அடுத்து என்னவாகுமோ? போட்ட தொகையாவது மிஞ்சுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
Investors losses in paytm, nykaa, PB & zomato go up to Rs.1.3L crore since day 1
Investors losses in paytm, nykaa, PB & zomato go up to Rs.1.3L crore since day 1/ரூ.1.3 லட்சம் கோடி நஷ்டம்.. கதறும் பேடிஎம், நய்கா, PB & Zomato முதலீட்டாளர்கள்!