சென்னை அடுத்த ஆவடியில் லாரியை முந்தி செல்ல முயன்ற பைக், பேருந்துக்கும் டிப்பர் லாரிக்கும் இடையே சிக்கி தீப்பற்றி விபத்துக்குள்ளான, சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆவடி டிப்போ எதிரே சாலையில் பேருந்து நின்றுக்கொண்டிருந்த போது, அவ்வழியாக ஒரு டிப்பர் லாரி சென்றது. அந்த லாரியை இடதுபுறமாக முந்தி செல்ல முயன்ற activa பைக் பேருந்துக்கும்- லாரிக்கும் இடையே சிக்கிக்கொண்டது.
இதில் பைக்கில் இருந்த இருவர் கீழே விழுந்து லாரிக்கு அடியில் சிக்கிய நிலையில் பைக்கில் இருந்து பெட்ரோல் கசிந்து தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரான ராணிப்பேட்டையை சேர்ந்த முனுசாமியிடம், பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.