தமிழகம்
முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் சென்னையிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனி
யிலும் வாக்களித்தனர்.
நடிகர் விஜய் காலையிலேயே வந்து நீலாங்கரையிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்துசென்றார். அதேபோல, சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களும் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர். தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய மனைவி கிருத்திகாவுடன் சென்று எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்களித்தார்
ஷங்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நடிகை அஞ்சலி …! படகுழுவினருக்குள் ஏற்பட்ட தகராறு…!
தமிழ்நாட்டில் இந்த முறை எதிர்பார்த்ததைவிட குறைவான அளவே வாக்குகள் பதிவாகியுள்ளது. 3 மணி நிலவரப்பட 47 சதவீத வாக்குகளை பதிவாகியிருந்தது. 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில் 52 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்தநிலையில் பிரபலங்கள் பலரும் வாக்களிக்காமல் தவறவிட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அனைத்து தேர்தல்களிலும் நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் வந்து காலை 7 மணி அளவிலேயே வந்து முதல் ஆளாக அவரது வாக்கைப் பதிவு செய்வார். ஆனால், இந்த முறை அவர் வாக்குப் பதிவு செய்யவில்லை. அதேபோல, ரஜினிகாந்த்தும் வாக்குப் பதிவு செய்ய வரவில்லை.
மற்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான
விஜய் சேதுபதி
,
சிவகார்த்திகேயன்
, சிம்பு, த்ரிஷா, தனுஷ், வடிவேலு உள்ளிட்டவர்களும் வாக்குப் பதிவு செய்யவில்லை. சூர்யாவும், கார்த்தியும் வாக்குப் பதிவு நிறைவடையும் தருவாயில்வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?