தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து இன்று மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 12,602 வார்டுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர்
விஜய்
வாக்க்களிக்க வாக்குச்சாவடிக்கு விரைந்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு சைக்கிளில் வந்து பரபரப்பை கூட்டிய நடிகர் விஜய் தற்போது சிவப்பு நிற காரில் வாக்களிக்க கிளம்பியுள்ளார்.
சென்னை மாநாகரட்சிக்கு உட்பட்ட 192 ஆவது வார்ட்டில் வாக்குப்பதிவு செய்கிறார். நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்துகிறார் விஜய். இவரின் வருகையை ஒட்டி வாக்குச்சாவடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சிவகார்த்திகேயன்: உருகும் ரசிகர்கள்.!
இந்த உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு கணிசமான இடங்களை வென்றனர். இந்நிலையில் இந்த தேர்தலில் தனது புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தினரின் கொடியைப் பயன்படுத்த விஜய் முதன்முறையாக அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.