சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பை தொடர்ந்து, வாக்காளர்களை கவரும் வகையில் கட்சி பேதமின்றி பல இடங்களில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடசென்னையில் ஒரு பகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு கோழி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. வாக்காளர்களுக்கு கோழிக்கறி விநியோகம் செய்தது திமுகவினர் என்று கூறப்படுகிறது.
அதுபோல மயிலாப்பூரில், ‘கியூ ஆர் கோட்’ கொண்ட டோக்கன் வழங்கிய அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில், மண்டபம் ஒன்றில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டதால், அந்த மண்டபத்தின் வெளிவாசலை பூட்டிய சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் பகுதியில், அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்கும் வகையில், அதிமுக வட்டசெயலாளர் தங்கதுரை என்பவர் QR Code முறையில் டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை மடக்கி கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.