வாடகை வீடு தேடுபவர்களா நீங்கள் – இத ட்ரை பண்ணுங்க… வீடு கண்பார்ம்!

தனியாக வீடு வைத்திருக்கும் மக்களை, அவரவர் வீட்டில் இருப்பதற்கு காலம் அனுமதிப்பதில்லை. வேலை நிமித்தமாக மக்கள் பல ஊர்களுக்கு பயணப்படுகின்றனர். அனைத்தையும் சமாளித்து விடும் இவர்களுக்கு வாடகை வீடு பிரச்னை மட்டும் தான் பெரும் தொல்லையாக இருக்கும். ‘நான் ஊர்ல எப்டி இருந்தேன்’ என்று புலம்பிக் கொண்டே தெருக்களில் வீடு தேடி அலையும் குரல்களை நாம் அவ்வப்போது கேட்க முடியும்.

முக்கியமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் தான்,
வாடகைக்கு வீடு
கிடைப்பது பெரும் பிரச்னையாக இருக்கும். வீடு தேடி சலித்துப்போன பிறகு, ஏதேனும் இடைத்தரகர்களை இவர்கள் தொடர்பு கொள்கின்றனர். புரோக்கர்களும் தங்கள் கைவசம் இருக்கும் வீடுகளை இவர்கள் தலையில் கட்டிவிட்டு, இரண்டு மாத வாடகை வரை தரவு தொகையாக பெற்றுக் கொள்கின்றனர்.

பழைய பணம்… நிறைய துட்டு – எப்படி சாத்தியம்?

இதுபோன்ற பிரச்னைகள் இல்லாமல், வீட்டிலிருந்தபடியே வாடகைக்கு வீடு தேடலாம். அதற்காக பல இணையதளங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதில் பலதும் சரியாக வீடுகளை காட்சிப்படுத்துவதில்லை. எனவே, உங்களுக்காக சிறந்த தளங்களை இங்கு தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளோம். ஆனால், வாடகை வீட்டை தேடுவதற்கு முன்பாக சில விஷயங்களை நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவசியமானதாகும்.

நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வீட்டின் அருகே பள்ளி, மருத்துவமனை ஆகியவை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்உங்கள் வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தம் நடந்து செல்லும் தூரத்தில் இருக்க வேண்டும்வாடகை வீட்டை எடுப்பதற்கு முன், கழிவறைகள், தண்ணீர் செல்லும் பாதைகளை சோதித்து பாருங்கள்எப்போதும் உயரம் அதிகமான இடத்தில் இருக்கும் வீடுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்வீட்டில் ஏதேனும் பொருள்கள் உடைந்திருந்தால் உடனடியாக மாற்றித் தரும்படி வீட்டின் உரிமையாளரிடம் கூறுங்கள். இல்லையென்றால் வீட்டில் குடியேறிய பிறகு அந்த செலவையும் நீங்கள் ஏற்க வேண்டி இருக்கும்
Aadhaar அட்டைக்கு டிஜிட்டல் பூட்டு போட்டு பாதுகாக்கலாம்… ஒரு SMS அனுப்பினால் போதும்!

வாடகைதாரர் – வீட்டு உரிமையாளர் முரண்பாட்டைத் தவிர்க்க ஒப்பந்தப் பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். ஏனெனில் அதிலேயே பல முரண்பாடுகள் தீர்க்கப்படும். அதாவது வாடகை, பராமரிப்புத் தொகை, மின் தொகை, பெயிண்டிங் செலவு, முன்பணம் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். முரண்பாடு ஏற்படும்போது முன்பணத் தொகையை இருவரும் மாற்றிச் சொல்லக்கூடும்.இதனால் பத்திரம் பதிவது மிகவும் நல்லது.

kisan credit card: கிசான் கிரெடிட் கார்டு உடனே பெறுவது எப்படி… 4% மலிவு வட்டியில் கடன்!

வாடகை ஒப்பந்தப் பத்திரம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி வாடகைதாரர், உரிமையாளர் இருவரும் ஒரு மனதாக அந்த பத்திரத்தை எழுதி, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். இந்த ஒப்பந்தம் 11 மாதத்துக்குத்தான் போடுவார்கள். 11 மாதத்துக்கு ஒருமுறை இதனை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், இந்த பத்திரம் இருந்தால், நீங்கள் செல்லும் ஊரில் கிடைக்கும் சேவைகளை எளிதில் பெறலாம்.

வாடகை வீடு தேடுவதற்கு எந்தெந்த தளங்கள் சிறந்தது என்று பார்க்கலாம்

நோ புரோக்கர் (No Broker)
தரவு தொகை இல்லாத முதல் ரெண்டல் மற்றும் சொத்துகள் வாங்கும் தளம் இது. அனைவரும் பயன்படுத்தும் வகையிலான Quick Interface-ஐ இந்த தளம் கொண்டிருக்கிறது. வாடகை வீடு தேட நினைப்பவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

மேஜிக் பிரிக்ஸ் (Magic Bricks)
இந்தியாவின் மிகப்பெரிய Property போர்டல் இது. இங்கு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் அல்லது தரகர்கள் பதிவிடும் சொத்துகள் இந்த தளத்தில் பார்க்கமுடியும். வீடு வாங்கவும், வீட்டை விற்கவும், வாடகைக்கு இடங்களை கொடுக்கவும், வீட்டு கடன் பெறவும், வாடகை செலுத்தவும் என நிறைய சேவைகளை இந்த தளம் வழங்குகிறது

99 ஏக்கர்ஸ் (99 Acres)
இதுவும் நாட்டின் மிக பழமையான புராப்பர்ட்டி தளமாகும். இங்கு பயனர்கள் வீடுகளை வாங்கவும், விற்கவும், வாடகைக்கு எடுக்கவும் முடியும். புதிய வீடுகளை வாங்க நினைப்பவர்களுக்கும் இந்த தளம் உதவியாக இருக்கும். பெருவாரியான பின்கோடுகளின் இதன் சேவை உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

மக்கான் (Makaan.com)
இந்த தளத்தில் 10,000க்கும் அதிகமான விற்பனையாளர்கள் உள்ளனர். வீடுகளை தேர்ந்தெடுப்பது இதில் சுலபமாக இருக்கும். வீடுகளை விற்கவும், வாடகைக்கு எடுக்கவும் இந்த தளம் இலவச சேவையை வழங்குகிறது.

ஹவுசிங்.காம் (Housing.com)
REA குழுமத்தால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவில் வாடகைக்கு விடப்படும் பெரும்பாலான வீடுகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது.

நெஸ்ட்அவே (Nestaway)
வாடகை வீடு தேடுபவர்களுக்கு இந்த தளமும் உதவியாக இருக்கும். மேலும், வீட்டின் உரிமையாளர்களுக்கு சிறந்த வாடகைதாரரை இந்த தளம் தேடித் தருகிறது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த தளத்தில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.