பீஜிங்: குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கில் பங்கேற்ற நட்சத்திரங்கள் பல்வேறு ‘டிசைன்’ கொண்ட ‘ஹெல்மெட்’ அணிந்து அசத்தினர்.
சீனாவின் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. உறைந்த பனியில் வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் திறமை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் ஆபத்தான விளையாட்டு ‘ஸ்கெலிடன்’ (எலும்புக் கூடு). சிறிய பலகையில் படுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பனியில் தலைகீழாக 130 கி.மீ., வேகத்தில் வீரர், வீராங்கனைகள் பாய்ந்து வருவர். இவர்களுக்கு ‘ஹெல்மெட்’ மட்டும் தான் பாதுகாப்பு. இவர்கள் அணிந்திருந்த வித்தியாசமான ‘டிசைன்’ கொண்ட ‘ஹெல்மெட்’, பார்க்கும் போதே புதுமையாக இருந்தது.
தலையை குனிந்து கொண்டு வந்த போது, ‘ஹெல்மெட்டில்’ இருந்த ‘டிசைன்’ ரசிகர்களுக்கு ‘திரில்’ அனுபவத்தை கொடுத்தது.தங்களது தேசிய பறவையான கழுகு ‘ஹெல்மெட்’ அணிந்து அமெரிக்காவின் கேட் வந்த போது, கழுகு தலைகீழாக பறந்து வந்தது போல இருந்தது. சீன வீரரின் ‘ஹெல்மெட்’ பண்டைக்கால வம்சத்தை நினைவுபடுத்தியது. ஜெர்மனியின் ஹெர்மான் அணிந்து வந்த தேசிய சின்னம், இத்தாலி வீரர் பாக்னிசின் ‘ஜோக்கர்’, போர்டோரிகோ வீரர் கெல்லியேவின் ‘மூன்றாவது கண்’, கனடா வீரர் மிரெலாவின் ‘யூனிகார்ன்’ (கற்பனையான ஒற்றைக் கொம்பு குதிரை) ‘டிசைன்’ கொண்ட ‘ஹெல்மெட்’ பெரும் வரவேற்பை பெற்றன.
Advertisement