புதுடில்லி:நாட்டில், 18 வயது கடந்தோரில் 80 சதவீதம் பேருக்கு, இரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், 36.28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன், இதுவரை செலுத்திய டோஸ் 175.03 கோடியாக உயர்ந்து உள்ளது. இதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.5 சதவீதம் பேர் முதல் டோஸ் மற்றும் 80 சதவீதம் பேர் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் நேற்றைய சமூக வலைதள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:தற்போது, 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த எண்ணிக்கை 100 சதவீதத்தை நோக்கி விரைவாக செல்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புதுடில்லி:நாட்டில், 18 வயது கடந்தோரில் 80 சதவீதம் பேருக்கு, இரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.கொரோனா வைரஸ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.