40 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், காணொலி வாயிலாக இந்தியாவின் பிரதிநிதிகளாக ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீடா அம்பானி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, அடுத்தாண்டிற்கான கூட்டத்தை மும்பையில் நடத்த முன்மொழியப்பட்டதை, அனைத்து நாடுகளும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டன.
இது குறித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட பிரதமர் மோடி, ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தை நடத்த இந்தியா தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இக்கூட்டம் மறக்கமுடியாத நிகழ்வாக அமையும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.