நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் `அரபிக் குத்து’ பாடல் கடந்த பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று வெளியானது. இப்பாடல் வெளியாகி நான்கு நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஹிட் அடித்து வருகிறது. இப்பாடலுக்கு பலரும் நடனமாடி தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தாவும் இந்த ‘அரபிக் குத்து’ பாடலுக்கு விமான நிலையத்திலிருந்து நடமாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமந்தாவின் இந்த ‘அரபிக் குத்து’ நடனத்தை பார்த்த பீஸ்ட் பட கதாநாயகியான பூஜா ஹெக்டே ‘amazee’ என ரியாக்ட் செய்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராமில் சமந்தாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘அப்படி ஒன்னும் அழகு இல்லையே’ என குறிப்பிட்டிருந்தார். இதனால் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கும் சமந்தாவின் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் சண்டை நிகழ்ந்திருந்தது. தனது இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதாக பூஜா ஹெக்டே அறிவித்தும் இந்த சமூக வலைதளச் சண்டை முடியவில்லை. இரு நடிகைகளின் ரசிகர்களிடையே ஏற்பட்ட இந்த மனக் கசப்பு தற்போது பூஜா ஹெக்டே, சமந்தாவை புகழ்ந்து பேசியது மூலம் முடிவுக்கு வந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.