இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணையம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்துவிட்டது. மேலும், இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களும், இண்டர்நெட்டும் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதால் அனைவரும் இதைப் பயன்படுத்துகின்றனர். இதில் பயனுள்ள விஷயங்கள் பல இருந்தாலும், இளசுகள் முதல் முதியவர் வரை சிலருக்கு இணையமும், அது சார்ந்த செயலிகளும் இப்போது ஒருவித போதைப்பொருளாக மாறி இருக்கிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் நாள் முழுவதும் ஸ்மார்ட்போன்களிலே நேரத்தை செலவிடுகின்றனர். குழந்தைகள் கூட வெளியில் விளையாடுவதற்குப் பதிலாக மொபைல் கேம்களில் மணிக்கணக்கில் செலவிடுவதைக் காணலாம். இதன் காரணமாக பல நோய்களும் மக்களைத் தொற்றிக் கொள்கிறது.
Wordle: வோர்டில் விளையாடலாமா… இனி நீங்களும் வேர்டில் உருவாக்கலாம்!
விளையாட்டால் வந்த வினை
இந்த 5ஜி தலைமுறையில் ஸ்மார்ட்போனில் இருக்கும் பெரும் ஆபத்தாக பார்க்கப்படுவது ஆன்லைன் விளையாட்டுகள் தான். இந்த ஆபத்தை மெய்ப்பிக்கும் விதமாக பல உயிரிழப்புகளும் நடந்துள்ளது. தற்போதும் பள்ளி மாணவர் ஒருவர் கேமிங் பழக்கத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் தான் இந்த கோர முடிவை தேடியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் ஒன்றிய அரசு 50க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதித்தது. இந்த பட்டியலில் மிகவும் பிரபலமான Free Fire விளையாட்டும் அடங்கும். அதிகளவு மொபைல் பயனர்களின் பிடித்த கேமாக இது இருந்து வந்தது. மும்பையைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவனும் இந்த விளையாட்டுக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. அரசு விதித்த தடையைத் தொடர்ந்து பல முறைகளில் இந்த கேமை விளையாட மாணவர் முயற்சி செய்துள்ளார்.
யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி… இத மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க!
சிறுவன் தற்கொலை
முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியவே, மாணவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று சிறுவனின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். வெளியெ சென்ற பிறகு, தந்தை மகனிடம் தொலைபேசி வாயிலாக ஒரு முறை பேசியுள்ளார். சில மணிநேரம் கழித்து மீண்டும் அவர் மகனுக்கு அழைத்தபோது, சிறுவன் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?
வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், மகனின் அறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு, அதை திறக்க முயற்சி செய்துள்ளனர். அது முடியாமல் போகவே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுவன் உயிரற்ற நிலையில் இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ந்து போன பெற்றோர், அயலார் உதவியுடன் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக மும்பை அரசு மருத்துவமனைக்கு சிறுவனின் உடலை அனுப்பி வைத்தனர். குழந்தைகள் தனியாக இருக்கும்போது, ஸ்மார்ட்போனை கையில் கொடுப்பது ஆபத்தான காரியம் என காவல் துறையினர் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வரும் நிலையிலும், சில பெற்றோர்கள் இதை பொருட்படுத்தாமல் குழந்தைகளுக்கு மொபைலை விளையாட கொடுக்கின்றனர். இதன் விளைவாக பல உயிர்களை இழக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
PAN அட்டையை Aadhaar உடன் இணைத்துவிட்டீர்களா – இல்லைன்னா பிரச்னை தான்!
இணைய கேமிங்கிற்கு அடிமையாதல் ஆபத்தாக முடியும்
நீண்ட நேரம் இணைய விளையாட்டுகளை விளையாடும் குழந்தைகளுக்கு கவனம் செலுத்தும் திறன் குறைவாக இருக்கும்இத்தகைய குழந்தைகள் மூளையில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதுகுழந்தைகள் நிதானத்தை இழக்கிறார்கள்அவர்கள் சொல்வது மட்டுமே சரியாக இருப்பதாக நினைக்கிறார்கள்குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள்இவர்கள் சமூக வாழ்வில் இருந்து விலகி தனியாக இருக்க விரும்புகிறார்கள்இன்டர்நெட் கேமிங் குழந்தைகளின் வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.உடல் பருமன், சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம்
தற்கொலை என்றுமே தீர்வாகாது
ஒருவரின் இழப்பு என்பது அவர்களின் மொத்த குடும்பத்தையும் நிலைகுலைய செய்துவிடும். தன் இழப்புக்கு பின் அந்த குடும்பத்தின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும். தற்கொலை எண்ணம் வந்தால் உடனடியாக 9152987821 அல்லது 104 என்ற எண்களை தொடர்புகொண்டு பேசவும். தற்கொலை மட்டுமே அனைத்திற்கும் தீர்வாகி விடாது. அதுவும் சின்ன வயதில் பிள்ளைகள் எடுக்கும் இதுபோன்ற முடிவுகள் அவர்களின் மன வலிமையின்மையையே பிரதிபலிக்கிறது. வாழ்க்கை ஒன்று தான்… அதை வாழ்ந்து பார்த்திடணும்!
வாடகை வீடு தேடுபவர்களா நீங்கள் – இத ட்ரை பண்ணுங்க… வீடு கண்பார்ம்!