Russia-Ukraine விவகாரத்தால் உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது: ஐ.நா

முனிச்: ரஷ்யா உக்ரைன் இடையிலான விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 1990 களில் சோவியத் யூனியன் பிரிந்தபோது இருந்த பதற்றங்களுக்குப் பிறகு, அதே வீரியத்தில், இன்னும் சரியாக சொல்லப்போனால், அதைவிட அதிக வீரியத்திலான கிழக்கு-மேற்கு பதற்றம் தற்போது நிலவி வருகிறது. 
பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருக்கிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஏற்படும் சிறிய தவறுகளும் தவறான தகவல்தொடர்புகளும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று குடெரெஸ் எச்சரித்தார்.

“நாம் ஒரு புதிய பனிப்போரை எதிர்கொண்டிருக்கிறோமா என பலரும் என்னிடம் அவ்வப்போது கேட்கிறார்கள். எனது பதில் என்னவென்றால், இப்போது உலகப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் மிகவும் சிக்கலாகவும் முன்பு இருந்ததை விட இன்னும் அதிகமாகவும் உள்ளது,” என்று முனிச்சில் நடந்த வருடாந்திர பாதுகாப்பு மாநாட்டில் தனது தொடக்க உரையில் குட்டரெஸ் கூறினார்.

மேலும் படிக்க | அடுத்த கட்டத்துக்கு செல்லும் உக்ரைன் ரஷ்யா விவகாரம்: மழலையர் பள்ளி மீது ஷெல் தாக்குதல் 

20 ஆம் நூற்றாண்டில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்த மோதலின் போது, ​​அபாயங்களைக் கணக்கிடவும், நெருக்கடிகளைத் தடுக்க பின்-சேனல்களைப் பயன்படுத்தவும் உதவும் வழிமுறைகள் இருந்தன என குடெரெஸ் கூறினார்.

“இன்று, அந்த அமைப்புகளில் பல இல்லை, அவற்றைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் இப்போது நம்மிடம் இல்லை.” என்றார் அவர்.

ஆனால் உக்ரைனைச் சுற்றி ரஷ்ய துருப்புக்களைக் குவிப்பது இராணுவ மோதலை ஏற்படுத்தாது என்று தான் இன்னும் நம்புவதாக அவர் கூறினார்.

“அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொது அறிக்கைகள் பதட்டங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும், அவற்றைத் தூண்டக்கூடாது” என்று குடெரெஸ் கூறினார்.

முனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோனி பிளிங்கன் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் கலந்து கொண்டனர். எனினும், ​​ரஷ்யா சார்பில் எந்த மூத்த அதிகாரியும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது. 

மேலும் படிக்க | Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்! 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.