ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள அஜித்தின் வலிமை படத்தின் புரொமோஷனுக்காக தயாரிப்பாளர் போனி கபூர் சென்னை வந்துள்ள நிலையில், கோலிவுட் தேவதைகள் ஒரு செம டின்னரில் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், வழக்கம் போல அஜித் மட்டும் ‘மிஸ்’ஆகி இருக்கிறார்.
இயக்குனர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வலிமை படத்தின் புரொமோஷனுக்காக தயாரிப்பாளர் போனி கபூர் சென்னை வந்துள்ளார்.
சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட டின்னர் நிகழ்ச்சியில், கோலிவுட்டின் சீனியர் நடிகைகள் மூதல் ஜூனியர் நடிகைகள் வரை கோலிவுட்டின் தேவதைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த டின்னர் நிகழ்ச்சியில் போனிகபூரும் கலந்துகொண்டார்.
இந்த டின்னர் நிகழ்ச்சியில், நடிகைகள் ராதிகா, ரம்யா கிருஷ்ணன், ஷோபனா, குஷ்பு, லிஸி, திரிஷா என பல நடிகைகள் கலந்துகொண்டனர். இவர்களுடன் இயக்குனர் கௌதம் மேனனும் கலந்துகொண்டார்.
இந்த டின்னர் நிகழ்ச்சியில் நடிகைகள் சந்திப்பு குறித்து நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், “ஏகப்பட்ட இனிமையான அனுபவங்கள், நல்ல நட்புகள், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அருமையான விஷயங்கள், இந்த டின்னருக்கு ஏற்பாடு செய்த லிஸிக்கு எனது நன்றி” என தெரிவித்துள்ளார்.
போனிகபூர், அஜித்தின் வலிமை படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்துள்ளதால் அந்த நேரத்தில் லிஸி இந்த டின்னர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், வழக்கம் போல, இந்த டின்னர் நிகழ்ச்சியில் அஜித் மட்டும் மிஸ் ஆகியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“