பிஜீங்,
ஒலிம்பிக் போட்டி போல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உறைபனியில் நடத்தக்கூடிய விளையாட்டுகள் மட்டும் இதில் இடம் பெறும்.
இதன்படி 24-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 4-ம் தேதி தொடங்கி இன்றுடன் 24-ந் தேதி நிறைவடைகிறது. சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நார்வே 15 தங்கம் உள்பட 35 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. ஜெர்மனி 11 தங்கம் உள்பட ( 24) பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 9 தங்கம் உள்பட (15) பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 8 தங்கம் உள்பட (24 ) பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.