உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்; இந்திய குடிமக்கள் தற்காலிமாக வெளிபேற இந்தியா அறிவுறுத்தல்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நிலவுவதால், கியேவில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லாத இந்திய குடிமக்களும், இந்திய மாணவர்களும், உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

பதற்றம் நிறைந்திருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கவலைகளை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா முன்னதாக அறிவித்தது. பிப்ரவரி 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த விமானங்கள் இயக்கப்படும்.

இந்தியாவைத் தவிர, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவும் தங்கள் குடிமக்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளன. மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், போர்ச்சுகல், இஸ்ரேல், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளன.

மேலும் படிக்க | Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!

உக்ரைனில் “உடனடி” ரஷ்ய படையெடுப்பு குறித்து மேற்கு நாடுகள் எச்சரித்துள்ள நிலையில் இந்தியாவின் இந்த அறிவுறுத்தல் வெளி வந்துள்ளது. உக்ரைனின் மூன்று பக்கங்களிலும் சுமார் 150,000 ரஷ்ய வீரர்கள், போர் விமானங்கள் மற்றும் உபகரணங்களால் சூழப்பட்டுள்ளது என்று PTI தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை உக்ரேனிய வீரர்களுக்கும் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையேயான  எல்லையில் ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கான பீரங்கி குண்டுகள் வெடித்தன. இதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் கிழக்கு உக்ரைனில் இருந்து வெளியேறினர்.

மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?

இதற்கிடையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி,  நெருக்கடியைத் தீர்க்க பேச்சு வார்த்தை நடத்தலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்தார்.

“அமைதியான தீர்வுக்காக உக்ரைன் இராஜதந்திரப் பாதையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும்” என்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் Zelenskyy சனிக்கிழமை கூறினார். இருப்பினும், ரஷ்ய தரப்பில் இருந்து உடனடி பதில் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.