உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், உலக பணக்காரர்களின் ஆண்டு வருமானம் பற்றியும் அல்லது ஒருநாள் வருமானம் பற்றியும் அறிந்து கொள்ள எப்போவுமே ஆர்வம் உண்டு.
இந்த பணக்கார நிறுவனங்கள் பலகோடி மனிதர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத நிலையில், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு கூட தங்கள் நிறுவனங்களின் ஆண்டு வருவாய் எவ்வளவு, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்று தெரிவது இல்லை என்பது நிதர்ச்சனமான உண்மை.
அந்த வகையில் இந்த கட்டுரையில் உலகில் உள்ள பணக்கார மனிதர்களின் ஒருநாள் வருமானம் முதல் ஒரு நிமிட வருமானம் வரை கூறப்பட்டுள்ளது.
1.Elon musk:
உலகின் முதல் பணக்காராக எலன் முஸ்க் திகழ்கிறார். இவர் Tesla மற்றும் spaceX என்ற நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார். 2021ம் ஆண்டு புள்ளிவிவரப்படி இவரின் மொத்த சொத்து மதிப்பு 200 மில்லியன் டாலர். மேலும் இவரின் Tesla மற்றும் spaceX என்ற நிறுவனங்கள் ஒரு நிமிட நேரத்திற்கு 22,500 டாலர்களையும் ஒரு வினாடி நேரத்திற்கு 375 டாலர்களையும் சம்பாதிக்கிறது. மேலும் 2022ம் ஆண்டு இவரின் வருமானம் மேலும் அதிகரிக்க தான் செய்துதுள்ளது, 2022 ஆம் ஆண்டில் இவர் நிறுவனத்தின் ஒரு மணிநேர வருமானம் 1.41 பில்லியன் டாலர் என்ற உயர்வையே சந்தித்துள்ளது.
2. Bernard Arnault:
பெர்னார்ட் அர்னால் பிரெஞ்சு முதலீட்டாளராகவும், மிக பெரிய தொழிலதிபராகவும், பார்க்கப்பட்டு வருகிறார். மேலும் இவர் LVMH என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். உலகின் அனைவராலும் மிக ஆடம்பரமான பிராண்டாக கருதப்படும் லூயிஸ் உய்ட்டனை விற்கும் நிறுவனமும் இவருடையது தான். இவரின் ஒரு நிமிட வருமானம் சுமார் 17,716 டாலர்கள் ஆகும்.
3. Mukesh Ambani :
இந்திய தொழிலதிபர்களில் முகேஷ் அம்பானி 92.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அம்பானியின் சொத்துகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 பெரும்பாலான பணக்காரர்கள் வருமானத்தை இழந்த காலத்தில், இவர் மட்டும் வருமானத்தை அதிகரித்து கொண்டு இருந்தார். அதன் பின்னர் அவரது நிறுவனங்கள் மேலும் மேலும் செழித்து வருகின்றன. இவரின் வணிக நிறுவனங்கள் தொற்றுநோய்களின் போது நிமிடத்திற்கு ரூ 1.5 கோடி சம்பாதித்துள்ளது.
4. Gautam Adani:
இவர் அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார். இவரது அதனை குழுமம் இந்திய துறைமுக மேம்பாடு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அதனை குழுமத்தின் ஆண்டு வருமானம் 1,40,200 கோடியாகும். மேலும் புள்ளிவிவர தகவலின் படி ஒருநாளைக்கு 1002 கொடியும் ஒரு நிமிடத்திற்கு 167 கொடியும் அதானி மற்றும் அவரது குழுமம் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளது.
5. Jeff Bezos:
ஜெப் பெசோஸ் உலகின் மிக பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரின் ஒரு நிமிட வருமானமாக 1,42,667 டாலர்களை உள்ளது.
6. Warren Buffet:
வாரன் பூபட் இவர் ஒரு அமெரிக்கா தொழிலதிபர் மற்றும் பெர்க்ஷயர் ஹாத்வேயின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். சில அறிக்கைகளின் படி 2013ல் அவரின் சொத்துமதிப்பு 12.7 பில்லியன் டாலராக இருந்துள்ளது மற்றும் அவரின் ஒருநாள் வருமானமாக 37,000,000 டாலர்கள் வரை சம்பாதித்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதன் பிந்திய நாள்களில் அவரின் வருமானம் மேலும் அதிகரித்து இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
7. Lary Page:
இவர் Google Larry Page இன் இணை நிறுவனர் மற்றும் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இவரின் இந்த நிறுவனம் பொதுத்துறைக்குச் சென்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 1டாலர் மட்டுமே வருடாந்திர சம்பளமாக பெற்றுவருகிறார். 2013 அறிக்கையின்படி , லாரி பேஜ் ஒரு நிமிடத்திற்கு 18,719 டாலர்கள் சம்பாதித்து உள்ளார்.
8. Bill Gates:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆவார். இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வந்ததால் அவர் நீண்ட காலமாக உலகின் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவராக இருந்து வந்துள்ளார். 2018 மற்றும் 2019 க்கு இடையில், பில் கேட்ஸின் நிகர மதிப்பு சுமார் 90 பில்லியனில் டாலரில் இருந்து 106 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அந்த ஒரு வருடத்தில் மட்டும் அவர் 16 டாலர் பில்லியன் சம்பாதித்து உள்ளார். அப்போது பில் கேட்ஸின் ஒரு நிமிட வருமானம் 30,400 டாலராக இருந்துள்ளது.
9. Mark Zuckerberg:
மார்க் ஜுக்கர்பெர்க், பேஸ் புக் நிறுவனத்தின் நிறுவனர், மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இவர் குறைந்தது ஒரு நாளைக்கு 6 மில்லியன் டாலர்கள் முதல் 12 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அறிக்கைகளின் அடிப்படையில் ஜுக்கர்பெர்க் அவரின் பங்குகள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 9,000,000 டாலர்களும், ஒரு நிமிடத்திற்கு 6,250 டாலர்களையும் வருமானமாக பெற்றுவருவதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜுக்கர்பெர்க் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து வருடாந்திர ஊதியம் வெறும் 1 டாலர் மட்டுமே பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.