திருவனந்தபுரம் : ”அரசாங்கத்தில் உள்ள யாருக்கும், கவர்னரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது,” என, கேரள மாநில அரசை, கவர்னர் ஆரிப் முகமது கான் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையில், தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், மாநில அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அதன் விபரம்:கேரளாவில், அமைச்சர்களிடம் தனிப்பட்ட முறையில், பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் வெறும் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கும், மாநில அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இது, அதிகார துஷ்பிரயோகமாகும்.

மாநில மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவது நியாயமல்ல. இந்த நடைமுறையை, மாநில அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.இல்லையெனில், நான் இதற்கு முடிவு கட்டுவேன்.நான் மாநில அரசை நல்லபடியாக நடத்துவதற்கு மட்டும் இங்கு வரவில்லை.
அரசியலமைப்பிற்கு உட்பட்டு மாநில அரசின் செயல்பாடுகள் இருப்பதை உறுதிப்படுத்தவே, நான் இங்கு கவர்னராக உள்ளேன். அரசாங்கத்தில் உள்ள யாருக்கும், கவர்னரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement