75 வருடங்களுக்கு பிறகு ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய போரை உண்டாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று, வருடாந்த பாதுகாப்பு மாநாட்டிற்காக உலகத் தலைவர்களைச் சந்திக்க ஜேர்மனியின் முனிச் நகருக்கு சென்றிருந்த நிலையில், பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார்.
அப்போது பேசிய அவர், இதுவரை தெரிந்த அனைத்து அறிகுறிகளின்படி ரஷ்யா அதன் திட்டத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதை உணரமுடிகிறது என்றார்.
மேலும், ரஷ்யப் படைகள் கிழக்கிலிருந்து டான்பாஸ் வழியாக உக்ரைனுக்குள் நுழையத் திட்டமிடவில்லை, ஆனால் பெலாரஸ் மற்றும் கியேவைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து கீழே நுழைவதற்கு ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை பரிந்துரைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேற்கத்திய தலைவர்களிடம் கூறியதாக பிரதமர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் “1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போராக இருக்கக்கூடிய ஒன்று என்று சொல்ல நான் பயப்படுகிறேன்,” என்று பிரதமர் கூறினார்.
உக்ரேனியர்களின் உயிரிழப்புகளை மட்டுமல்ல, “இளம் ரஷ்யர்களின்” உயிரிழப்புகளையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து,
உலகத் தலைவர்களிடம் ரஷ்யாவின் உக்ரைன் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பும் “உலகம் முழுவதும் எதிரொலிக்கும்” என்று அவர் உலகத்த தலைவர்களுடனான கூட்டத்தில் போரிஸ் ஜான்சன் பேசினார்.
முழு நேர்காணலும் பிபிசி ஒன்னின் சண்டே மார்னிங் நிகழ்ச்சியில் 09:00 GMT மணிக்கு ஒளிபரப்பப்படும்.