கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. என்ன செய்யலாம்..!

தங்கம் விலையானது ரஷ்யா உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து சமீபத்திய நாட்களாக உச்சம் தொட்டு வருகின்றது.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, சரிவினைக் கண்டு வருகின்றது.

கடந்த ஓராண்டில் 10 கிராமுக்கு 50,123 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், வரவிருக்கும் வாரத்தில் புராபிட் புக்கிங் காரணமாக சரிவினைக காணலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.

மீடியம் டெர்ம் இலக்கு

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் புராபிட் புக்கிங் இருக்குமா? தங்கம் விலையானது சரிவினைக் காணுமா? வரும் வாரத்தில் எப்படி இருக்குமோ? என்ற சந்தேகம் நிலவி வருகின்றது. தங்கத்தின் மீடியம் டெர்ம் இலக்கு 1900 – 1910 என்ற லெவலை தொடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

புராபிட் புக்கிங்

புராபிட் புக்கிங்

எனினும் இது புராபிட் புக்கிங் இருந்தால் சற்று சரிவினைக் கண்டு, மீண்டும் ஏற்றம் காணலாம். இதற்கிடையில் பணவீக்கம் குறித்த அச்சமும் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பாதிகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
 

எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் மத்திய வங்கியானது விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அடுத்த 3 – 4 மாதங்களில் தங்கம் விலையானது 2000 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 52000 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை அதிகரிக்கும்

விலை அதிகரிக்கும்

ஒரு வேளை வரும் வாரத்தில் 1865 டாலரினை தொட்டால் வாங்கலாம். இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அது மேற்கொண்டு எண்ணெய் விலை அதிகரித்தால், அது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். மொத்தத்தில் தங்கம் விலையானது அடுத்தடுத்து 1950 மற்றும் 2000 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரத்திந் தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டது. இது கடந்த திங்கட்கிழமையன்று 1862.20 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சமாக 1845.40 டாலர்களாக தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1905 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் முடிவில் 1900.80 டாலர்களாக முடிவடைந்தது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடக்கத்தில் தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், கடந்த திங்கட்கிழமையன்று 23.650 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று 23.125 டாலர்களாக தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 24.165 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். முடிவில் 23.950 டாலர்களாக முடிவுற்றது. மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்தே, இந்த வாரம் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் தொடத்தில் இருந்தே ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 50,177 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 49,230 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 50,438 ரூபாயினை தொட்டது. எனினும் முடிவில் 50,112 ரூபாயாக முடிவுற்றது. இது வரும் வாரத்தில் புராபிட் புக்கிங் இருக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகிறது. நாளை தொடக்கத்தினை பொறுத்த்யு வாங்கலாம்.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் ஆரம்பத்தில் ஏற்றம் கண்டு, பின் சரிவில் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 63,100 ரூபாயாக தொடங்கியது. அன்றே குறைந்தபட்சமாக 62,525 ரூபாயாகும். வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 64,220 ரூபாயினை தொட்டு, பின்னர் 63,902 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது வரும் வாரத்தில் புராபிட் புக்கிங் இருக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகிறது. நாளை தொடக்கத்தினை பொறுத்த்யு வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில் இரு நாள் தவிர, மற்ற அனைத்து நாட்களும் ஏற்றத்தில் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 37,560 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4732 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,856 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இரண்டு நாள் தவிர, மற்ற நாட்கள் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 51,220 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 51,620 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 68.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 686 ரூபாயாகவும், கிலோவுக்கு 68,600 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 67,500 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 68,600 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள், வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்து வாங்கலாம். நாளையின் சந்தையின் போக்கினையும் கண்கானித்து அதற்கேற்ப தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகள் தங்கத்தின் விலைக்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold prices rise to highest levels in 1 year, should we buy?

gold prices rise to highest levels in 1 year, should we buy?/கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. என்ன செய்யலாம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.