கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் பரிசோதனை செய்வதற்கு அனுமதி கிடைத்திருப்பதாக அதனை தயாரக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் தரப்பரிசோதனை நடத்தக் கோரி விண்ணப்பம் அளித்திருந்தது.
இந்த நிறுவனத்தின் அமெரிக்க பங்குதாரரான Ocugen நிறுவனமும் அமெரிக்காவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கு கோவாக்சினை உற்பத்தி செய்து விநியோகிக்க அனுமதி கோரியது.
இந்நிலையில் பாரத் பயோடெக் விடுத்த அறிக்கையில் , கோவாக்சினை அமெரிக்காவில் கோவிட்டுக்கு எதிரான தடுப்பூசியாக பயன்படுத்துவதற்குரிய தரப்பரிசோதனை நடத்த அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.