சில்லறை முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. எல்ஐசி ஐபிஓ-வில் அதிரடி திட்டம்..!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நாட்டில் மிகபெரிய பொது பங்கு வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சந்தைக்கு வரும் முன்பே இதன் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

குறிப்பாக பொதுப் பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக வாய்ப்பு என்பார்கள்.

கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. என்ன செய்யலாம்..!

எல்ஐசி ஐபிஓ

எல்ஐசி ஐபிஓ

இந்த நிலையில் எல்ஐசி இன்னும் சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் எல்ஐசி ஐபிஓ-வில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு கணிசமான பங்குகள் ஒதுக்கீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மொத்த விற்பனையில் சுமர் 25,000 கோடி ரூபாய் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லறை முதலீட்டாளார்கள் ஆர்வம்

சில்லறை முதலீட்டாளார்கள் ஆர்வம்

இந்த எல்ஐசி ஐபிஓவில் சுமார் 7.5 – 10 மில்லியன் சில்லறை முதலீட்டாளார்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டலாம். இது இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய பங்கு வெளியீடாக இருக்கலாம்.

இந்த வெளியீட்டில் ஒரு தனி நபர் சரியாக 30,000 – 40,000 ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம்.

டீமேட்கள் அதிகரிப்பு
 

டீமேட்கள் அதிகரிப்பு

இந்தியாவில் 73.8 மில்லியன் டீமேட்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது எல்ஐசி ஐபிஓ விரைவில் வெளியாகலாம் என்ற நிலையில், தற்போது 80 மில்லியனாக டீமேட் கணக்கு அதிகரித்துள்ளது. இது மார்ச் மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வம்

ஆர்வம்

இந்த பங்கு வெளியீட்டில் தனி நபர்கள் முதல் கொண்டு நிறுவனங்கள், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள், வங்கிகள் என பலரும் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ஐபியோ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படலாம். இதில் பாலிஸ்தார்களுக்கும் சில சலுகைகள் இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது?

எப்போது?

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் எல்ஐசி ஐபிஓ தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. எனினும் மார்ச் 11 அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போஅல் பங்கு விலையும் 2000 – 2100 ரூபாய் என்ற லெவலில் இருக்கலாம் என்றும் தெரிகிண்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC seeks 7.5 – 10 million retail investors may apply for its IPO

LIC seeks 7.5 – 10 million retail investors may apply for its IPO/சில்லறை முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. எல்ஐசி ஐபிஓ-வில் அதிரடி திட்டம்..!

Story first published: Sunday, February 20, 2022, 14:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.