கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்று ஏற்றத்தினைக் கண்ட நிலையில் 10ல் 5 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது,85,712.56 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இதில் டிசிஎஸ் டாப் கெயினராகவும், வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரண்டாவது கெயினராகவும் உள்ளது.
வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!
இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 491.90 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது.

டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.

டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 36,694.59 கோடி ரூபாய் குறைந்து, 14,03,716.02 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 3793.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 32,014.47 கோடி ரூபாய் அதிகரித்து, 16,39,872.16 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 2424.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 12,781.78 கோடி ரூபாய் அதிகரித்து, 5,43,225.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து,2312.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி
இதே ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனம் 2703.68 கோடி ரூபாய் அதிகரித்து, 4,42,162.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.22% அதிகரித்து, 2441.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது,1518.04 கோடி ரூபாய் அதிகரித்து, 4,24,456.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.74% குறைந்து, 7030.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 5845.84 கோடி ரூபாய் குறைந்து, 7,17,944.43 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.03% குறைந்து,1706.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வங்கியின் சந்தை மதிப்பானது 28,779.7 கோடி ரூபாய் குறைந்து, 5,20,654.76 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 748.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 12,360.59 கோடி ரூபாய் குறைந்து, 4,60,019.1 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
5 of top 10 firms adds over Rs.85,000 crore crore in market capitalization, TCS top gainer
5 of top 10 firms adds over Rs.85,000 crore crore in market capitalization, TCS top gainer/ டிசிஎஸ், ரிலையன்ஸ் கொடுத்த மெகா வாய்ப்பு.. ஒரே வாரத்தில் ரூ.85,000 கோடிக்கு மேல் லாபம்..!