வாஷிங்டன்:’டொனால்டு டிரம்பின் வார்த்தைகள், ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லி., கட்டடத்திற்குள் நடந்த வன்முறைகளுக்கு வழிவகுத்திருக்கக்கூடும்’ என, அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில், 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், போராட்டங்களில் குதித்தனர். புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில தினங்களுக்கு முன், டிரம்ப் ஆதரவாளர்கள், ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்திற்குள் நுழைந்து பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த வன்முறை சம்பவத்திற்கு, டிரம்ப் தன் ஆதரவாளர்களை துாண்டி விடும் வகையில் பேசியது தான் காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, டிரம்புக்கு எதிராக, வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில், எம்.பி.,க்கள் சிலரும், பார்லி., போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்தபோது, நீதிபதி அமித் மேத்தா கூறியதாவது: பார்லி., கட்டடத்திற்குள் நடந்த வன்முறைகளுக்கு, டொனால்டு டிரம்ப் காரணமாக இருக்கலாம். அன்றைய தினம் நடந்த பேரணியின்போது, டிரம்ப் பேசிய வார்த்தைகள், வன்முறைகளுக்கு வழிவகுத்திருக்கக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement