Thippili Rasam recipe in tamil: குளிர்காலத்தில் பயணித்து வரும் நமக்கு உடல் நிலை சரியில்லாமல் போவது வழக்கம் தான். இப்படி திடீரென ஏற்படும் நோய்களை குணப்படுத்திவதில் சிறந்தவையாக நம்முடைய அன்றாட உணவுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ரசம் முக்கிய பங்காற்றுகிறது.
ரசத்தில் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு வகை நோய் தொற்றுகளை குணப்படுவதில் சிறந்ததாக இருக்கின்றன. அந்த வகையில் இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் அற்புத ரசமாக “திப்பிலி ரசம்” உள்ளது. இவை நோய்களை குணப்படுவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
இந்த சூப்பர் ரசத்தை எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
திப்பிலி ரசம் தயார் செய்யத் தேவையான பொருட்கள்
அரிசி திப்பிலி – 10,
கண்டதிப்பிலி – சிறிதளவு,
மிளகு – 10,
காய்ந்த மிளகாய் – 1,
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு,
சீரகம், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
கொத்தமல்லி – சிறிதளவு
திப்பிலி ரசம் சிம்பிள் செய்முறை
முதலில் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பிறகு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் விட்டு வறுக்கவும். பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.
இந்த அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை மிக்ஸ் செய்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தணலில் கொதிக்கவிடவும்.
இதற்கிடையில், மற்றொரு பாத்திரம் எடுத்து அதை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு, சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அவற்றை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான திப்பிலி ரசம் தயார்.
இந்த அற்புத ரசத்தை பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
R