Punjab elections: State CEO orders FIR against Arvind Kejriwal for poll code violation: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சனிக்கிழமை உத்தரவிட்டார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட வீடியோ மீது SAD துணைத் தலைவர் அர்ஷ்தீப் சிங் கிளர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேர்தல் நடைபெறும் பஞ்சாபில் ஜனவரி 8-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இதையும் படியுங்கள்: இங்குள்ள இஸ்லாமியர்கள் எங்களை பாதுகாக்கின்றனர்.. பாகிஸ்தான் தமிழர்களின் நெகிழவைக்கும் வீடியோ!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ், AAP, SAD-BSP, BJP-PLC-SAD (சன்யுக்த்) மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் அரசியல் முன்னணியான சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.