நேபாளத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர்.
நேபாளத்தில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்தடம் அமைக்கவும், சாலைகளை மேம்படுத்தவும் அமெரிக்க அரசு 3,700 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதன் மூலம் 80 சதவீத மக்கள் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.
இருந்தபோதும், இத்திட்டங்களை வழிநடத்தும் வாரியத்தில் நேபாள அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை என எதிர்கட்சியைனர் குற்றம்சாட்டியதால் போராட்டங்கள் வெடித்தன. போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை அப்புறபப்டுத்தினர்.