தலைவர் 170
படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார்
ரஜினிகாந்த்
. இந்நிலையில் தலைவர் 170 படத்தை பால்கி இயக்குவார் என்று கூறப்பட்டது. தனுஷை வைத்து இந்தியில் ஷமிதாப் படத்தை இயக்கியவர் பால்கி.
தனுஷ்
மூலம் தான் ரஜினியிடம் கதை சொன்னாராம். ஆனால் பால்கியின் இயக்கத்தில் நடிக்க ரஜினிக்கு விருப்பம் இல்லையாம். இதையடுத்து பால்கிக்கு ‘நோ’ சொல்லிவிட்டாராம் ரஜினி.
தான் பரிந்துரை செய்த இயக்குநரை ரஜினி நிராகரித்தது தனுஷுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.
தலைவர் 170 படத்தை அருண்ராஜா காமராஜ் தான் இயக்கவிருக்கிறாராம். அந்த படத்தை போனி கபூர் தயாரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அருண்ராஜாவிடம் கதை கேட்ட ரஜினிக்கு அது மிகவும் பிடித்துவிட்டதாம்.
முன்னதாக தலைவர் 170 படத்தை பால்கி இயக்குவார், இசைஞானி இளையராஜா இசையமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அது எல்லாம் வெறும் பேச்சாகவே போய்விட்டது.
செய்யாத காரியத்திற்காக ஐஸ்வர்யாவை பாராட்டும் தனுஷ் ரசிகர்கள்
தனுஷ் பரிந்துரை செய்த பால்கியை ரஜினி நிராகரித்ததில் ஆச்சரியம் இல்லை. அவரின் கடைசி படத்தை யார் இயக்க வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால் ரஜினி செய்தது தான் சரி என்கிறார்கள் ரசிகர்கள்.