பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் அமைச்சர் பர்கத் சிங், ஜலந்தரின் மிதாபூரில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார். மற்றொரு அமைச்சர் பாரத் பூஷன் ஆஷு, லூதியானா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், மொஹாலியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி லூதியானாவில் உள்ள வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். காலை 9 மணி நிலவரப்படி பஞ்சாப்பில் 4.80 சதவீத வாக்குகள் பதிவாகின.
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை 8.15 சதவீத வாக்குகள் பதிவாகின.
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் அபய் ராம் யாதவ் சைஃபாய் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி மகத்தான வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்… பஞ்சாப்: தேர்தல் விதிமீறல் வழக்குகளை எதிர்கொள்ளும் முன்னணி தலைவர்கள்