பிரிட்டன் அரசிக்கு கோவிட் தொற்று| Dinamalar

லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 95 வயதாகும் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதியாகி உள்ளது. லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது. அனைத்து விதிமுறைகளையும் அரசி பின்பற்றுவார். அதேநேரத்தில் தனது கடைமைகளையும் அவர் பின்பற்றுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அரசியின் மகனான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் கோவிட்டால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில், கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் ஒருவர் 10 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். அதில் 6 மற்றும் 7வது நாளில் எடுக்கப்படும் பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என வந்தால், தனிமைபடுத்துதலை முடித்து கொள்ளலாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.