பிரித்தானியாவில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வரும் வாரத்திலிருந்து சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் “கோவிட்-19 நோய்த்தொற்றுடன் வாழப்பழகிக் கொள்ளும்” புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதன்படி, கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்ப்பவர்கள் இனி 10 நாட்கள் வரை சுய-தனிமைப்படுத்தவதற்கான சட்டத் தேவையை பிரித்தானியா கைவிட உள்ளது.
COVID-19 தொடர்பில் விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதால், பிரித்தானிய மக்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கூறினார். நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இந்த திட்டம் குறித்து அவர் விவரிக்கவுள்ளார்.
இருப்பினும், இது ஆபத்தான முடிவு என்று அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
இதனால் நோய்ப்பரவல் முற்றலாம்; எதிர்காலத்தில் தோன்றக்கூடிய புதிய வகைக் கிருமிகளை எதிர்கொள்ளும் எதிர்ப்பாற்றலை மக்கள் இழக்க நேரிடலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.