புதுடெல்லி: மத்திய பட்ஜெட் அறிவிப்புக்களை அமலாக்குவது தொடர்பான வெபினாருக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு முழு அமர்வில் பிரதமர் உரையாற்றுகிறார்
பட்ஜெட் அறிவிப்புகளை விரைவாகவும், செயல்திறனுடனும் அமல்படுத்த, மத்திய அரசு பல்வேறு முக்கிய துறைகளில் தொடர் இணையவழி கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை, கல்வி, தொழில் துறைகளின் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அறிந்து, பல்வேறு துறைகளின் கீழ், சிறந்த நடைமுறைகளைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும்.
இந்த தொடர் வெபினார்களின் ஒரு பகுதியாக, கல்வி அமைச்சகம் வரும் 21-ம் தேதி, கல்வி மற்றும் திறன் துறை பற்றிய வெபினாருக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு கருப்பொருள்களில், பொருத்தமான அமர்வுகள் இதில் இடம்பெறும். பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசுகளின் அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள், திறன் மேம்பாட்டு அமைப்புகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் இதர வல்லுநர்கள் இதில் பங்கேற்பார்கள்.
முழு அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார். பல்வேறு அமர்வுகளில், செயல் திட்டங்கள், விரிவான உத்திகள், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல் ஆகியவை பங்கேற்கும் குழுக்களால் கண்டறியப்படும்.