முனிச்: சீனாவுடனான, நமது உறவு இப்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது: சீனாவுடன் இந்தியாவிற்கு பிரச்னை உள்ளது. 45 ஆண்டுகளாக அமைதி நிலவியது. நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. 1975 முதல் எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் இல்லை. ராணுவ படைகளை கொண்டு வரக்கூடாது என்று நாங்கள் சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அது மாறியது. நாங்கள் அதை எல்லைக்கோடு என அழைக்கிறேம். ஆனால், அது நிலையான கட்டுப்பாட்டு கோடு.
மேலும் சீனா அந்த ஒப்பந்தங்களை மீறியது. எல்லையில் நிலைமையை பொறுத்தே அவர்களுடன் எம்மாதிரியான உறவு இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும். இது இயற்கையான நியதி. எனவே தற்போது சீனாவுடனான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கின்றன. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை குறித்து கேட்டதற்கு, அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தோ – பசிபிக்கிலும் டிரான்ஸ்அட்லாண்டிக்கிலும் உள்ள சூழ்நிலைகள் ஒன்றானது என நான் கருதவில்லை. இங்கு ஒரு தரப்பு ஆதாயம் அடையும் வர்த்தகம் உள்ளது தான். பசிபிக் பகுதியில் ஒரு நாடு அதைச் செய்கிறது என்பதற்காக, நீங்கள் பதிலுக்கு வேறு ஏதாவது செய்வது சர்வதேச உறவுகளில் ஒத்துவராது. இந்தோ – பசிபிக் பகுதியில் தற்போது நடப்பவை எங்களுக்கு மிகவும் வித்தியசமான சவால் கொண்டவை. என சீனாவின் பெயரை குறிப்பிட்டாமல் சொன்னார்.
சீனா தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளையும், ராணுவ தளங்களையும் கட்டியுள்ளது. தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தென் சீனக் கடலில் தங்கள் பகுதிகளை உரிமைக் கோரினாலும், சீனா தென் சீனக் கடல் முழுவதையும் உரிமைக் கொண்டாடுகிறது.
Advertisement