உள்ளூர் அளவில் ஊரடங்கை அறிவிக்க வேண்டாம் என, அனைத்து பிராந்திய நிர்வாகங்களுக்கு அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
சீனா
மட்டும் இன்னும் ‘ஜூரோ கோவிட் கொள்கை’யில் தீவிரமாக உள்ளதால், தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள
பைஸ்
உட்பட இடங்களில்
முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது.
‘நான் செய்த மிகப்பெரிய தவறு!’ – ஒப்புக் கொண்ட பிரதமர்!
இந்நிலையில், சீனாவின், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், அனைத்து பிராந்திய அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கி உள்ளது. அதில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அல்லது அனுமதியின்றி பொதுப் போக்குவரத்தை துண்டிக்க வேண்டாம் என்றும், அங்கீகரிக்கப்படாத அல்லது மாவட்டம் முழுவதும் ஊரடங்கை விதிக்க வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது.
மேலும், திரையரங்குகள், உணவகங்கள், வணிக வளாகங்களை மூடவோ அல்லது மூடும்படி அறிவுறுத்தவோ வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.