கோல்கட்டா: கோல்கட்டாவில் நடந்த மூன்றாவது ‛டி20′ போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸ் அணியை தோற்கடித்தது.
இந்தியா வந்த விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‛டி20′ தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் கோல்கட்டாவில் நடந்த மூன்றாவது போட்டியிலும் விண்டீஸ் அணியை 17 ரன்கள் வித்தியா்சத்தில் தோற்கடித்தது .
கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற விண்டீஸ் கேப்டன் ‛பீல்டிங்’ தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் (4) ஏமாற்றம் தந்தாலும் பின்னர் ஆடிய இஷான் கிஷான் (34) ஸ்ரேயாஸ் (25) நம்பிக்கை தந்தனர். கேப்டன் ரோகித் (7) நிலைக்கவில்லை. சிக்சர் மழை பொழிந்த சூர்யகுமார் (65 ரன், 7 சிக்சர்) அரைசதம் விளாசினார். இவருக்கு வெங்கடேஷ் (35*) ஒத்துழைப்பு தர, இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன் குவித்தது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விண்டிஸ் அணி ஆட்டத்தை துவங்கியது. இந்தியாவின் ஹர்ஷல் படேல் மற்றும் வெங்கடேஷ் இரு விக்கெட்டுகளை சாய்த்தனர். ஆனால், விண்டிஸ அணியின் பூரன் நிதானமாக ஆடி 50 ரன்களை தொட்டார். அடுத்து களமிறங்கிய ரொமாரியோ செப்பர்டு ரன்களை எடுத்தார், இருந்தாலும் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியாக 167 ரன்கள் எடுத்த நிலையில் விண்டிஸ் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் விண்டிஸ் அணியை தோற்கடித்தது.
Advertisement