மாஸ்கோ: ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே போர்ப் பதற்றம் அதிரித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா ஏவுகணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. கடந்த வெள்ளியன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது.
இதனுடன் டியூ-95 அணுகுண்டுகளையும் நீர்மூழ்கி கப்பல்களையும் சோதனை செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு ஜெனரல் வலெரி கராஷிமோ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடம் ரஷ்ய ஏவுகணைகள் எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றது இந்த சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிரி நாடுகளிடமிருந்து ரஷ்யாவை பாதுகாக்கவே இதுபோன்ற சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஒருவேளை எதிர்காலத்தில் போர் மூண்டால் இந்த ஏவுகணைகள் மூலமாக ரஷ்யா, உக்ரைனை தாக்கும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் அஞ்சுகின்றன. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement