ரியோ டி ஜேனிரோ,
ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டத்தில் பிரேசில் வீரர் மோண்டேரோவுடன் பெரட்டனி மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் பெரட்டினி வென்றார். இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் மோண்டேரோ கைப்பற்றினார்.
இதனையடுத்து வெற்றியாளரை நிர்மாணிக்கும் கடைசி செட்டை 6-3 என்ற கணக்கில் பெரட்டினி வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். இன்று இரவு நடைபெறும் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் உடன் பெரட்டினி மோத உள்ளார்.