சர்வதேச அளவிலான பொறியியல் நிறுவனமான டாடா டெக்னாலஜி நிறுவனம் 2023ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாடு உட்பட பல பகுதிகளிலும் இந்த பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இந்தியா முழுவதிலும் பணியாளர்களை அதிகரிக்கலாம்.
பணியமர்த்தல்
மூன்றாவது காலாண்டில் மட்டும் நிறுவனம் 1500 பேரை பணியமர்த்தியுள்ளது. ஆக ஓராண்டுக்கான 3,000 பேர் என்ற கணிப்பு என்பது குறைவாக இருந்தாலும், இது தேவைக்கு ஏற்ப மாறுபடலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆக இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 201.2 கோடி ரூபாயாக உள்ளது. இதன் செயல்பாட்டு வருவாய் 1034.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டாடா டெக்னாலஜிஸ் அறிவிப்பு
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் பொறியியல், உற்பத்தி, சேவைகள் என பலவற்றினை ஏர்பஸ் உள்பட நிறுவனங்களுக்கும் செய்து வருகின்றது. இது போன்ற பல நிறுவனங்களுக்கும் சேவையினை வழங்கி வரும் டாடா டெக்னாலஜி நிறுவனத்திற்கு, தேவை அதிகரித்து வருவதன் மத்தியில், பணியமர்த்தல் குறித்தான சாதகமான செய்தியும் வந்துள்ளது.
டிசிஎஸ்
டாடா குழுமத்தினை சேர்ந்த மற்றொரு முன்னணி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், அதன் ஆஃப் கேம்பஸூக்கு (TCS Recruitment 2022) அறிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் பணியமர்த்தலில் சம்பளம் மாதம் 60,000 ரூபாய் வரை இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இதற்கு 6 மாதம் முதல் 1 வருடத்திற்குள் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்
2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், இந்த TCS Recruitment 2022 ஆஃப் கேம்பஸிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 6 – 1 வருடம் அனுபவம் இருந்தாலும் போதும் என்றும் அறிவித்துள்ளது. இதில் இளங்கலை பட்டபடிப்பு படித்திருந்தால் சுமார் 7 லட்சம் சம்பளமும், முதுகலை பட்டப்படிப்பு படிந்திருந்தால் 7.3 லட்சம் வரையிலும் சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி என்ன?
இந்த ஆஃப் கேம்பஸிற்கு BE, BTech, ME, MTech, MCA, Msc, MS, integrated BS-MS, integrated BTech – Mtech, integrated BE – ME எந்த துறையானாலும், அங்கீகரிக்கப்பட்ட எந்த பல்கலைக் கழகம் அல்லது கல்லூரியாக இருந்தாலும் பரவாயில்லை இந்த பணியமர்த்தலுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு?
விண்ணப்பதாரர்களுக்கு 18 – 28 வயதிற்குள் இருக்க வேண்டும். முழு நேர படிப்புகள் மட்டுமே பரீசிலிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு அரியர் எதுவும் இருக்க கூடாது. அதோடு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ, இளங்கலை அல்லது முதுகலை என எதுவாக இருந்தாலும் 70% அல்லது 7 CGPA ஆக இருக்க வேண்டும். இதற்காக ஊழியர்கள் https://nextstep.tcs.com/campus/ என்ற இணையபக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
TCS recruitment 2022: Applications invited for off campus Digital hiring, salary up to Rs.7.3 lakh
TCS recruitment 2022: Applications invited for off campus Digital hiring, salary up to Rs.7.3 lakh/ரூ.7.3 லட்சம் வரை சம்பளம்.. டிசிஎஸ்-ன் நச் அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!